என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்திய பைலட்
நீங்கள் தேடியது "இந்திய பைலட்"
இந்தோனேசியாவில் 188 பேருடன் சென்று விபத்தில் சிக்கிய விமானத்தை பவ்யே சுனேஜா(31) என்ற இந்திய விமானி ஓட்டிச் சென்றதாக தெரியவந்துள்ளது. #Indianpilot #BhavyeSuneja #Indonesianplanecrash #LionAirplanecrash
ஜகர்தா:
இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
“லயன் ஏர் பேசஞ்சர்ஸ்” எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. இன்று அந்த விமானத்தில் மொத்தம் 188 பேர் சென்றனர்.
அவர்களில் 178 பேர் பெரியவர்கள், ஒரு சிறுவன், 2 கைக் குழந்தைகள், 2 விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்தனர்.
இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் 13-வது நிமிடத்தில் 6.33 மணிக்கு திடீரென மாயமானது. அந்த விமானத்துக்கும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறைக்குமான தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது.
இந்த விபத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்புகள் குறைவு என அஞ்சப்படும் நிலையில் விபத்துக்குள்ளான அந்த விமானத்தை பவ்யே சுனேஜா(31) என்ற இந்திய விமானி ஓட்டிச் சென்றதாக தெரியவந்துள்ளது. இவர் 6 ஆயிரம் மணிநேரம் விமானத்தை ஓட்டிய அனுபவம் மிக்கவராவார்.
இதேபோல், அவரது அருகில் துணை விமானியாக அமர்ந்திருந்த ஹர்வினோ என்பவரும் 5 ஆயிரம் மணிநேரம் விமானத்தை ஓட்டிய அனுபவம் கொண்டவர் என்று இந்தோனேசியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Indianpilot #BhavyeSuneja #Indonesianplanecrash #LionAirplanecrash
இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
“லயன் ஏர் பேசஞ்சர்ஸ்” எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. இன்று அந்த விமானத்தில் மொத்தம் 188 பேர் சென்றனர்.
அவர்களில் 178 பேர் பெரியவர்கள், ஒரு சிறுவன், 2 கைக் குழந்தைகள், 2 விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்தனர்.
இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் 13-வது நிமிடத்தில் 6.33 மணிக்கு திடீரென மாயமானது. அந்த விமானத்துக்கும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறைக்குமான தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது.
மாயமான அந்த விமானத்தை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது தெரிய வந்தது. விமானம் விழுந்த பகுதிக்கு மீட்புப் படைகள் விரைந்தன. ஜாவா கடல் பகுதியில் அந்த விமானத்தின் பல்வேறு பாகங்களும் மிதந்தபடி இருப்பதை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.
இதேபோல், அவரது அருகில் துணை விமானியாக அமர்ந்திருந்த ஹர்வினோ என்பவரும் 5 ஆயிரம் மணிநேரம் விமானத்தை ஓட்டிய அனுபவம் கொண்டவர் என்று இந்தோனேசியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Indianpilot #BhavyeSuneja #Indonesianplanecrash #LionAirplanecrash
×

X